விமான விபத்து குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கதி என்ன?
12 Jun,2025
அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அஹமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் சென்ற அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் பட்டியல் ஆவணத்தின்படி, "விஜய் ராம்னிக்லால் ரூபானி" என்பவர் பட்டியலில் 12-வது பயணி ஆவார். அவர் வணிக வகுப்பு பிரிவின் கீழ் வரும் இசட் பிரிவில் பதிவு செய்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி என சொல்லப்படுகிறது. ரூபானி ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதல்வராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
விமானம் மருத்துவர்களின் விடுதி மீது விழுந்து நொறுங்கியது- அதிகாரிகள் தகவல்
அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகின்றன.
விமானம் புறப்பட்டு சிலநிமிடங்களில் மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கியது என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்திற்கு ஒரிருநிமிடங்களில் அவசர சேவை பிரிவினர் சென்றுவிட்டனர்,அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.மதிய உணவுஇடைவேளையின் போது எனது மகன் விடுதிக்கு சென்றுள்ளார்,விமானம் அங்கு விழுந்து நொருங்கியுள்ளது எனது மகனிற்கு ஆபத்தில்லை,நான் அவரிடம் பேசினேன்,அவர் இரண்டாம் மாடியிலிருந்து குதித்ததால் சிறிய காயங்கள் என அஹமதாபாத் மருத்துவமனையில் தாயொருவர் தெரிவித்துள்ளார்.