நாயோடு குழியில் விழுந்த புலி..!
09 Jun,2025
தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது.
அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது.
இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழிக்குள் இருந்தாலும், விரட்டி வந்த நாயை புலி தனக்கு இரையாக்கிக் கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.