தேனிலவு முடிந்துவிட்டது; இனி இந்தியர்களுக்கு வேலை இல்லை - பிரபல தொழிலதிபர் கருத்து
20 May,2025
இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை என தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் சாவ்னி
ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் சாவ்னி. இவர் குர்கானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராவார்.
இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை.
அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. எனவே, கோடிக்கணக்கில் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் இதனை ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து பிறகே முடிவெடுக்க வேண்டும்.
பொறியியல் மாணவர்கள் அதிலும் குறிப்பாக ஐஐடி மாணவர்கள், எளிதாக ஹேக் செய்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்று, 2 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.75 கோடி சம்பளத்தில் தொழில்நுட்ப வேலையை பெற்றனர்.
ஆனால் இந்த ஹேக் இனி வேலை செய்யாது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதள பயனர்களிடையே தற்போது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.