கொல்கத்தாவை கைப்பற்ற தற்கொலை படை தாக்குதல் நடத்த தயார்..
14 May,2025
வங்கதேச ராணுவம் அனுமதி வழங்கினால் இந்தியாவின் கொல்கத்தா நகரில் தாலிபான் ஸ்டைலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆட்களை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று அந்த நாட்டின் இஸ்லாமிய மதகுருவான மவுலானா அப்துல் குத்தூஸ் ஃபாரூகி மிரட்டல் விடுத்துள்ளார். வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வந்தது. நெருங்கிய நட்பு நாடுகளாக வங்கதேசம் நம்முடன் இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு இந்த நிலைமை மாறியது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்த பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதோடு பாகிஸ்தான், சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி தேவையின்றி நம்மை இடைக்கால அரசின் தலைவர்கள் சீண்டி வருகின்றனர். இந்நிலையில் தான் வங்கதேசத்தின் ராணுவம் அனுமதி அளித்தால் கொல்கத்தாவில் தாலிபான் ஸ்டைலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயார் என்று வங்கதேசத்தின் இஸ்லாமிய மதகுருவாக உள்ள மவுலானா அப்துல் குத்தூஸ் ஃபாரூகி மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அப்துல் குத்தூஸ் ஃபாரூகி பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
மீண்டும் அதிரும் வங்கதேசம் வங்கதேசம் ராணுவம் என்னிடம் வந்து கொல்கத்தாவை அபகரிக்க வேண்டும் என்று கூறினால் என்னிடம் அதற்கு பிளான் உள்ளது. இதற்கு 70 போர் விமானங்களை பயன்படுத்த வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் கொல்கத்தாவை கைப்பற்ற 7 போர் விமானங்கள் கூட தேவையில்லை. எதற்காக எனக்கு 70 போர் விமானங்கள் வேண்டும்? என்னால் தற்கொலைப்படைகளை கொல்கத்தாவுக்கு அனுப்ப முடியும். வங்கதேச ராணுவம் அனுமதி அளித்தால் தற்கொலைப்படையை கொல்கத்தாவுக்கு அனுப்ப தயார்.
இதில் முதலில் செத்துவிட்டு பிறகு அனைவரையும் கொல்லலாம். இந்த யுக்தியை தான் தாலிபான்கள் கையாண்டனர். அவர்கள் சூப்பர் பவர் நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா மீது தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தினர். தாலிபான்கள் தங்களின் உடலில் குண்டுகளை கட்டிகொண்டு பைக்கில் அமெரிக்காவின் ராணுவ முகாம்களை நோக்கி சென்றனர். அவர்களை ராணுவத்தினர் சுட்டனர். ஒரு குண்டு உடலில் பாய்வதால் உடனடியாக சாகப்போவது இல்லை. மாறாக பைக்கை ராணுவ முகாமின் சுவரில் மோதி வெடிக்க வைத்து 300 அமெரிக்க வீரர்களை கொன்று அந்த முகாமையே அழித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலில் இறந்தது யார்? முஸ்லிம் பைக்கர். அவர் யாரை கொன்றது காஃபிர்களை''
என்று வாய்க்கொழுப்புடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்துல் குத்தூஸ் ஃபாரூகி பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் நம் நாட்டு மக்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ என்பது அவரது வலைதள பக்கத்தில் அதிக பார்வை மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது. வழக்கமாக அவர் வெளியிடும் வீடியோவுக்கு கிடைக்கும் பார்வைகளை விட 130 மடங்கு அதிக பார்வைகளையும், 90 மடங்கு அதிக லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது