இதயத்தில் அடித்த இந்தியா
13 May,2025
பல்வேறு பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. குறிப்பாகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள ராவல்பிண்டி ராணுவ தலைமையிடத்தில் உள்ள ஏர் பேஸில் கூட இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் இந்தியா வீழ்த்தியது. ஆனால், தனது ராணுவ தலைமையிடத்தில் நடந்த தாக்குதலைக் கூட பாகிஸ்தானால் முறியடிக்க முடியவில்லை. இதுவே மோதலில் கேம் சேஞ்சராக பார்க்கப்பட்டது. அதன் பிறகே மோதலே முடிவுக்குக் கொண்டு வரப் பாகிஸ்தான் தூதுவிட்டது.
11 பேர் மரணம் இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த விவரங்களைப் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் 78 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் ராணுவ வீரர்கள், மீதமுள்ள 5 பேர் விமானப்படை வீரர்கள் ஆவர். மேலும் இந்த மோதல் தொடங்கியது முதலே பாகிஸ்தான் பொய்யான செய்திகளைப் பரப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தது. இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவதும் அதன் பிறகு அம்பலப்பட்டு நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு ஆதாரமாகத் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்த விரிவான மேப்பை கூட இந்தியா வெளியிட்டிருந்தது. ஆனால், மக்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாக். ராணுவம் தொடர்ந்து பொய்யான கருத்துகளைப் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏர் மார்ஷல் விளக்கம் பிரதமர் மோடி முன்னதாக நேற்றைய தினம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் இல்லை.. ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு எனக் குறிப்பிட்ட அவர், நமது நாட்டின் மகள்கள் தங்கைகளின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய ராணுவம் உலகிற்குக் காட்டியதாக அவர் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்படும்போது அவை மீண்டும் தொடரும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.