ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளத்தை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலால், பல முக்கிய இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை பாகிஸ்தான் ராணுவம் மறுத்த நிலையில், மிகத் தெளிவான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் விமான பாதுகாப்பு அமைப்புகளின் அப்பட்டமான தோல்வியை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
" தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய விமான படையும், கப்பற்படையும் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தியது. குறிப்பாக எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் பல்வேறு விமான தளங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. ஆனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்தியாவின் விமானங்களை தான் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் பொய் சொல்லி வந்தது.
நறுக்குனு கேட்ட 4 கேள்விகள்" இந்த நிலையில் பாகிஸ்தானில் பொய்யை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தும் வகையில் சீன சாட்டிலைட் நிறுவனமான மிசாஸ் விஷன் (MIZAZVISION) துல்லியமான செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய விமானப்படை பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளத்தை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலால், பல முக்கிய இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நூர் கான் விமானத் தளம், பாகிஸ்தான் விமான இயக்குரகத்தின் தலைமையிடமாக செயல்படுவதோடு, முக்கியமான விமானங்கள் மற்றும் ராணுவ சாதனங்களை கொண்டுள்ளது. இதில் Saab Erieye வானூர்தி எச்சரிக்கை அமைப்பு, C-130 போக்குவரத்து விமானங்கள் மற்றும் IL-78 மீண்டும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இருந்தது. இந்த தளம், பாகிஸ்தான் ட்ரோன் போர் நடவடிக்கைகளுக்கு முக்கியமாக தளமாக பயன்படுகிறது.
குறிப்பாக இங்கு துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar TB2 ட்ரோன்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பான Shahpar-I ட்ரோன்கள் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தது. மேலும், இந்த விமானத் தளம் முக்கிய விமானிகளுக்கான பயிற்சி மையமாகவும், அதிவிறைவு வானூர்திகள் மற்றும் அதிபர் பயணிக்கும் விமானங்கள் நிறுத்தப்படும் தளமாகவும் உள்ளது. இதற்கிடையே இந்திய விமானப்படையின் தாக்குதலால் இங்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளனர். மேலும், இந்திய நிறுவனமாக KAWASPACE வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் பாகிஸ்தானின் போலாரி விமானத் தளத்தில் ஏற்பட்ட சேதங்களும் தெளிவாக காண முடிகிறது.
மே 10 அன்று இந்திய விமானப்படை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹீம் யார் கான் விமான தளத்தை தாக்கிய நிலையில், மே 18 காலை 4:59 வரை அந்த ரன் வே இயங்காது என கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களால், பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் முக்கியமான விமானத் தளங்களின் பாதுகாப்பு குறைபாடுகள் உலகிக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு ஒரு முக்கிய வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.