காஷ்மீரை நோக்கி வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்..பந்தாடிய இந்தியா!
10 May,2025
இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி முதல் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் பரஸ்பரம் அறிவித்தன. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் திடீரென ஜம்மு, காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்து வந்தன. இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தாக்கி அழித்தன. போர் நிறுத்தம் அறிவித்து நான்கு மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி இருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹலகாம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற நிலையில், இதில் பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகள் ஈடுபட்டதும் முன்னாள் பாரா கமாண்டோ ஒருவரே வழி நடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதை இந்தியா உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் முக்கிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
"இதுதான் இந்தியா..! ஒன்றல்ல.. இரண்டல்ல! பாகிஸ்தானின் பல ராணுவ தளங்கள் காலி! குறிவைத்து அடித்த ராணுவம்" தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி தாக்குதல்களையும் , ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.இதனை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்த நிலையில் பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளிடையே பதட்டம் நிரவிய நிலையில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகள் அமைதி காக்க வேண்டும் என இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கோரிக்கை விடுத்தன.
இதற்கிடையே மாலை 3:30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தன. மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
டிரம்ப் அப்படி சொன்னாரே!" இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் எல்லையில் அத்துமீறி இருக்கிறது பாகிஸ்தான். ஜம்மு, காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் 11 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் எல்லை தாண்ட முயற்சித்த நிலையில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதனை தாக்கி அழித்தன. இதேபோல கதுவா, சம்பா, சுந்தர்பானி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் அத்துமீறிய நிலையில் அவை அனைத்தும் தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில் வானில் வெடிச்சத்தங்களும், புரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வான் பாதுகாப்பு அம்சத்தை அப்கிரேட் செய்த இந்திய ராணுவம்" இந்த நிலையில் ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளை வெடிப்பு சத்தங்கள் கேட்பதாகவும், போர் நிறுத்தத்தை மீறி என்ன நடக்கிறது? என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.