நம் நாட்டின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலால் உயிருக்கு பயந்து பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் உள்ள 30 ராணுவ நிலைகளில் இருந்து வீரர்கள் எஸ்கேப் ஆகி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. நேற்றைய தினம் பாகிஸ்தான் ஏவுகணை, போர் விமானம், ட்ரோன்களை அனுப்பி காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களை தாக்க முயன்றது. இந்த முயற்சியை நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வானிலேயே தடுத்து நிறுத்தி முறியடித்தது. பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் வானிலேயே சிதறடிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி உடனடியாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் லாகூரில் உள்ள வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமின் கதை முடிந்தது. கராச்சி துறைமுகத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டது.
தப்பு செய்துவிட்டோம்.. அல்லா தான் இந்த நாட்டை காப்பாத்தணும்! பாக். நாடாளுமன்றத்தில் கதறி அழுத எம்பி பாகிஸ்தானிடம் ஏவுகணை, போர் விமானங்கள், ட்ரோன்கள் இருந்தாலும் கூட நம் நாட்டின் ஏவுகணை, ட்ரோன்களை வானில் இடைமறித்து தாக்கும் வசதி என்பது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதனால் நேற்றைய தினம் பாகிஸ்தான் நம்மிடம் சரமாரியாக அடிவாங்கியது. இந்நிலையில் தான் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவின் கொடூர தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து வீரர்கள் எஸ்கேப் ஆகி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது பாகிஸ்தானில் பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் மொத்தம் 30க்கும் அதிகமான ராணுவ நிலைகள் உள்ளன. இந்த ராணுவ நிலைகளில் எப்போதும் வீரர்கள் அதிகம் இருப்பார்கள்.
என்னது பாகிஸ்தானுக்கு ஆதரவா? துருக்கியின் அடிமடியிலேயே கைவைத்த இந்திய நிறுவனம்! தரமான சம்பவம் ஆனால் இப்போது அங்கு நிலைமை மாறி உள்ளது. பஞ்சாப் மகாணத்தில் உள்ள கராச்சி, கிளிப்டான், பைசல், ஹைதராபாத், மாளிர், கோரங்கி கிரேக், மானோரா, பனோ அகில், பெட்டரோ, பாடின், சோர் காஷ்மோர், ஜேக்கபாபாத் உள்ளிட்ட ராணுவ நிலைகள் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து வெளியேறி உள்ளனர்.
அதேபோல் பஞ்சாப் மாகாணத்தை எடுத்து கொண்டால் ராவல்பிண்டி, லாகூர், சியால்கோட், முல்தான், வா, ஜீலம், அடோக், குஜ்ரன்வாலா, ஒகாரா, முர்ரி ஹில்ஸ் உள்ளிட்ட ராணுவ நிலைகளில் குறைந்த அளவிலான வீரர்கள் மட்டுமே உள்ளனர். You May Also Like பாகிஸ்தானுடன் போர் பதற்றம்.. டிரம்பின் ஆஃபரை ஏற்க மறுத்த இந்தியா.. அமெரிக்காவுக்கு மேஜர் டிமாண்ட் அதாவது நம் நாடு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தொடரும்போது அதனை தடுக்கும் வசதி இல்லை. இதனால் ஒவ்வொரு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குகின்றன. இதனால் உயிருக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ராணுவ நிலைகளை விட்டு ஓட்டம் பிடித்துள்ளதாக ரிபப்ளிக் ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.