தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலி.. தொடரும் பதற்றம்
07 May,2025
பாகிஸ்தானில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் எல்லையில் நம்மை சீண்டி வருகிறது அந்த நாட்டின் ராணுவம். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு துல்லியமாக வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நம் நாட்டின் சார்பில் நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே
ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பறந்தன. அதில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நோக்கி வீசப்பட்டது. இப்படியாக 9 பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. அந்த நாட்டின் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் செயல்படவில்லை. இதனால் நம் ஏவுகணையை இடைமறிக்க பாகிஸ்தானால் முடியவில்லை. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்துள்ளது.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர்.
இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.
இந்தியாவை தாக்குங்க.. முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் போட்ட உத்தரவு.. அடுத்து என்ன? பதற்றம் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் காயமடைந்திருந்த ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் இன்று இரவு இறந்தார். மொத்தம் இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர், 15 பொதுமக்கள் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளனர்.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.