உடனே சுயமாக நாடு கடத்திக்கொள்ளுங்கள். இந்திய மாணவர்களுக்கு.. அமெரிக்கா மெயில்
30 Mar,2025
அமெரிக்காவில் படிக்கும் நூற்றுக்கணக்கான சர்வதேச வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக இந்திய மாணவர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து (DOS) அவசர மெயில்களை பெற்றுள்ளனர், கல்லூரி வளாகத்தில் அவர்களின் செயல்பாடு காரணமாக F-1 விசாக்கள் (மாணவர் விசாக்கள்) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களை சுயமாக நாடு கடத்துமாறும் இந்த மெயிலில் கூறி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக இந்திய அரசு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்ப உள்ளதாம். அமெரிக்காவில் படிக்கும் இந்திய ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்தும், மற்றொரு மாணவர் கனடாவுக்கு தானாக நாடுகடத்தப்பட்டதை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் குடிமக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு இணங்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தும் விதமாக மெசேஜ் அனுப்பி உள்ளது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பதர் கான் சூரி, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ரஞ்சினி சீனிவாசன் ஹமாஸ் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு உள்ளார். ரஞ்சினி சீனிவாசன் கனடாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார் . மெயில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கருத்து சொல்வது, போராட்டங்களை செய்வது, அரசின்
கொள்கைகளுக்கு எதிராக கருத்துக்களை சொல்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை லிஸ்ட் எடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பாக மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் படிக்கும் நூற்றுக்கணக்கான சர்வதேச வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக இந்திய மாணவர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து (DOS) அவசர மெயில்களை பெற்றுள்ளனர். Powered By நீங்கள் சுயமாக.. வெளியேறுங்கள்.. நாங்கள் கைது செய்து வெளியேற்றும் முன் நீங்கள் வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்து உள்ளனர். அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 221(i) இன் படி குறிப்பிட்ட காலாவதி தேதியுடன் கூடிய உங்கள் F-1 விசா ரத்து செய்யப்பட்டது. இதனால் இனியும் நீங்கள் அமெரிக்காவில் இருக்க முடியாது.
நீங்கள் சுயமாக.. வெளியேறுங்கள்.. நாங்கள் கைது செய்து வெளியேற்றும் முன் நீங்கள் வெளியேறிவிடுங்கள். அதோடு இது உங்களை எதிர்கால அமெரிக்க விசாவிற்கு தகுதியற்றதாக ஆக்கக்கூடும். நாடுகடத்தப்பட்ட நபர்களின் உடமைகளைப் பாதுகாக்கவோ அல்லது அமெரிக்காவில் விவகாரங்களை, பணிகளை முடிக்கவோ அவர்களுக்கு நேரம் வழங்கப்படாது. அதனால் அவர்கள் சுயமாக நாடுகடத்தப்பட வேண்டும். அரசு சார்பாக நாடுகடத்தப்பட்ட நபர்கள் அவர்கள் பிறந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும், என்றும் அரசு எச்சரித்து உள்ளது. அவசர மெசேஜ் இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக இந்திய அரசு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்ப உள்ளதாம். அமெரிக்காவில் படிக்கும் குடிமக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு இணங்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தும் விதமாக மெசேஜ் அனுப்ப உள்ளத
இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வரும்போது,அவர்கள் நமது சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல், இந்திய மக்கள் வெளிநாட்டில் இருக்கும்போது,அவர்களும் அங்கே உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மெசேஜ் அனுப்பப்பட உள்ளதாம். அமெரிக்காவின் சட்டங்களை, அவர்களின் விதிகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது