மியான்மர் – தாய்லாந்து எல்லையில் மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு:
13 Mar,2025
பாங்காக்: மியான்மர், தாய்லாந்து போன்ற வௌிநாடுகளில் நல்ல ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் போலி முகவர்களால் ஏமாற்றி அழைத்து செல்லப்படுகின்றனர்.அவர்கள் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள மோசடி ஆன்லைன் மையங்களில் பணியமர்த்தப்பட்டு, பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மியான்மர் – தாய்லாந்து எல்லையில் இயங்கும் சைபர் மோசடி மையங்களில் அடிமைகளாக சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காக சீனா, தாய்லாந்து, மியான்மர் நாடுகள் எடுத்த நடவடிக்கையின்படி 7,000 பேர் அண்மையில் மீட்கப்பட்டனர். அவர்களில் 2,000 பேர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வௌியானது. அவர்க ளில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 549 பேர் இரண்டு ராணுவ சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.