அமெரிக்க நிறுவனங்கள் கோல்டு கார்டை வாங்கி இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தலாம்:
28 Feb,2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் கோல்டு கார்டு என்னும் புதிய குடியுரிமை திட்டத்தை புதிதாக அறிமுகம் செய்தார். இதன்படி கோல்டு கார்டின் விலை 5மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.43கோடியாக இருக்கும். இது குறித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கோல்டு கார்டு வாங்குவதன் மூலமாக பணக்காரர்கள் நமது நாட்டிற்குள் வருவார்கள். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா உட்பட பிற நாட்டு மக்களை வேலைக்கு எடுப்பதற்கு இந்த கோல்டு கார்டை பயன்படுத்தலாம்.
இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் ஹார்வர்டு உள்ளிட்ட பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் அவர்களை பணிக்கு எடுக்கும்போது அமெரிக்காவில் இருக்க முடியுமா?முடியாதா-? என்ற யோசனை வருகின்றது. இந்த மாதிரியான நேரத்தில் அமெரிக்க நிறுவனங்கள் கோல்டு கார்டை வாங்கி அதனை நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் செயல்முறைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.