இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது 'நியாயமற்றது' - அமெரிக்க அதிபர் டொ
20 Feb,2025
ல்ட் டிரம்ப், இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று கூறினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தால், அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் எந்த நாட்டிற்கும் பதிலுக்கு வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் அரசு வகுத்து வருகிறது. சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது, இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பது குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன், சீனா ஹானிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், "உலகில் உள்ள அனைத்து நாடுகளும், வரி விதிப்பதன் மூலம் நம்மைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் ஒரு காரை விற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று கூறினார்.