அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம் பெயர்ந்து சிக்கிக்கொண்ட 300 பேர் பனாமா நாட்டில் உள்ள ஹோட்டலில் உதவி கேட்டு அழுது புலம்பியடி இருக்கிறார்கள். அவர்களில் கணிசமான அளவு இந்தியர்களும் இருக்கிறார்கள். ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள், கை கால்களில் சங்கிலியிட்டு ராணுவ விமானத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.இந்தியாவுக்கு இதுவரை 3 விமானங்களில் அமெரிக்கா சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களை திரும்ப அனுப்பி இருக்கிறது. அப்படி அனுப்பும் போது கை கால்காலில் விலங்கு போடப்பட்டிருந்ததாகவும், கழிவறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தியர்கள் மட்டுமின்றி பிரேசில், கொலம்பியா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சுமார் 18000 இந்தியர்கள் விரைவில் நாடு கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா புதிய முயற்சியை கையாண்டுள்ளது.இதன்படி அமெரிக்கா தனது நாட்டிற்கு அருகில் உள்ள பனாமா நாட்டில் இந்த வேலைகளை செய்ய முடிவு செய்திருக்கிறது.இதற்கு ஆகும் செலவை முழுமையாக அமெரிக்காவே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. பனாமாவில் வைத்து நாடு கடத்தும் திட்டத்தை அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 நபர்கள் பனாமா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மருத்துவ வசதி, உணவு வசதியுடன் உள்ள அந்த ஓட்டலில் 300 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அழுது புலம்பியபடி உள்ளனர். அதில் கணிசமான இந்தியர்களும் இருக்கிறார்கள். Powered By சட்ட விரோத குடியேறிகளை அங்குள்ள அதிகாரிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை, அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த குடியேறிகளில் 40% க்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பவில்லை என்று அறிவித்துள்ளதால் சவாலாக உள்ளது.. சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் "உதவி" வேண்டும் என்று கத்தி கூச்சலிடுகிறார்களாம். மேலும் "எங்கள் நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இல்லை" என்று கூறி நம்பிக்கை உடைந்தவர்களாக அழுது புலம்புகிறார்கள்.
இந்நிலையில் சில நாடுகளுக்கு நேரடியாக தனி நபர்களை நாடு கடத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, அமெரிக்கா நாடுகடத்தப்படுபவர்களுக்கான போக்குவரத்து நாடாக பனாமாவைப் பயன்படுத்தி வருகிறது. கோஸ்டாரிகாவும் புதன்கிழமை இதேபோன்ற மூன்றாம் நாடு நாடு கடத்தப்படுபவர்களைப் பெறும் நாடாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு கடத்தப்பட்ட 299 பேரில் 171 பேர் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பின் உதவியுடன் அந்தந்த நாடுகளுக்குத்
திரும்ப ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் , மீதமுள்ள 128 புலம்பெயர்ந்தோர் இன்னும் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் மூன்றாம் நாடுகளில் அவர்களுக்கான மாற்று இடங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா. நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள் என்கிற போதிலும், சிலர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப மறுக்கிறார்கள், அவர்களை நீண்ட தொலைவில் உள்ள டேரியன் மாகாணத்தில் உள்ள இடத்தில் தற்காலிகமாக அடைத்து வைக்கப்படுகிறார்கள். நாடு கடத்தப்படுபவர்களுக்கு ஒரு "பாலமாக"
பணியாற்ற பனாமா அரசு அண்மையில் தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. , இந்த நடவடிக்கைக்கான அனைத்து செலவுகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் வருகை பின்னர் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றுவதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோ அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டார். இந்நிலையில் டிரம்பின் கோரிக்கையை ஏற்று நாடு கடத்தப்படுவர்களுக்கு பாலமாக செயல்பட முடிவு செய்துள்ளது.