தினமும் விமானத்தில் பணிக்கும் செல்லும் இந்தியாவை சேர்ந்த பெண்
12 Feb,2025
T
இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. ரேச்சல் கவுர் மலேசியாவில் வேலை செய்து, வீட்டு வாடகை அதிகம் என்பதால் தினமும் 350 கிமீ பயணம் செய்கிறார்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இந்த வாக்கியம் மற்ற நாடுகளுக்கு பொறுத்தமாக இருக்குமோ இல்லையோ, ஆனால் இந்தியாவிற்கு அதிகளவில் தேவைப்டும் வாக்கியம் இருந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் ஆண்கள் அதிகமாக இருந்தாலும் தற்போது பெண்களும் சரிக்கு சமமாக பணிக்கு செல்கின்றனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வீட்டு வாடகை மிகவும் அதிகமாக இருப்பது அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதற்கு உதாரணமாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் கவுர் வாழ்க்கையை கூறலாம்.
ரேச்சல் மலேசியாவில் ஏர் ஏசியா நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். அவரது அலுவலகம் மலேசியாவின் தலைநகர் கோலாலாம்பூரில் உள்ளது. ஆனால், அவர் தனது குடும்பத்துடன் பெனாங்கில் வசித்து வருகிறார். தினமும் தனது குடும்பத்தினருடன் இருக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் கோலாலாம்பூரில் இருந்து பெனாங்கிற்கு விமானத்தில் பயணிக்கிறார்.