மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது. தொடரும் சிங்கள படையின் அட்டகாசம்.
09 Jan,2025
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்ச்சியாக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடிக்காமல் இருக்க மீனவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க 10 மீனவர்கள் சென்றதாகவும், அவர்களை இலங்கை படை கைது செய்ததற்காகவும், அவர்களிடமிருந்து விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.