பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அவருடைய தொலைநோக்கு பார்வை இந்தியாவின் அரசியலிலும் பொது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர் மன்மோகன் சிங் அவருடைய லகசி இந்தியாவை மேம்படுத்துவதில் ஈடுபடுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் வியக்கவைக்கும் கல்வித்தகுதி: வெளிநாடுகளில் பட்டங்கள் பெற்றவரின் உயரிய பதவிகள்!
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கல்வித்தகுதி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. வெளிநாடுகளின் கல்வி நிலையங்களில் பல பட்டங்கள் பெற்றவர், இந்திய அரசின் பல உயரியப் பதவிகளையும் வகித்துள்ளார்.
வியாழக்கிழமை (டிச.26) இரவு காலமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பஞ்சாபில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முறையே 1952 மற்றும் 1954ல் பெற்றார்.
பிறகு அவர், 1957-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் பட்டம் பெற்றார். அடுத்து 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் டி.பில் பட்டமும் பெற்றார். மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தனது பணியை துவக்கினார். பிறகு, உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் பேராசிரியராகத் தொடர்ந்தார்.
ADVERTISEMENT
HinduTamil17thDecHinduTamil17thDec
பேராசிரியர் மன்மோகனின் திறமையை கேள்விப்பட்ட அப்போதைய மத்திய அரசு மன்மோகனுக்கு 1971-ல், வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக்கியது. தொடர்ந்து அவர், 1972-ல் மத்திய நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் UNCTAD செயலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.
அடுத்து அவருக்கு 1987-1990 வரை ஜெனீவாவில் தெற்கு ஆணையத்தின் பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் மன்மோகன் சிங், 1991 முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மாநிலங்களவையில் அவர் 1998-2004 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வரலாற்று வெற்றிகள் கிடைத்தன. இதன் சார்பில் மன்மோகன், கடந்த 22 மே 2004 மற்றும் மீண்டும் 22 மே 2009 அன்று என இரண்டு முறை பிரதமராக பதவியேற்றார்.
முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் - அவரது மனைவி குர்ஷரன் கவுருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் மேம்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன், ஒரு நேர்மையான அரசியல்வாதியாகவும் கருதப்படுகிறார்