இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.57,120-க்கு வந்து சேர்ந்துள்ளது, ஆனால் எப்போதும் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவை விட விலை குறைவாக தங்கத்தை வாங்க முடியும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு 297 திர்ஹம் (ரூ.6,822) மட்டுமே. இதனால், ஒரு பவுன் தங்கத்தை அமீரகத்தில் வாங்குவது இந்தியாவில் வாங்குவதைவிட ரூ.2,543 குறைவாக இருக்கும்.
இந்தியாவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹57,120 என்றபோதிலும், செய்கூலி மற்றும் GST சேர்த்து ஒரு பவுன் நகைக்கு ₹61,800 வரை செலவாகும். இதில், செய்கூலி குறைந்தபட்சம் 5% என்று கணக்கிடப்பட்டுள்ளது. GST 3% ஆகும். அப்படியானால் துபாய் உட்பட அரபு நாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி இந்தியா வந்துவிடலாமா என்றால், அதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தங்கம் துபாயில் ஏன் மலிவாக உள்ளது?: துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை விட குறைவாக இருக்க பல காரணங்கள் உள்ளன:
ஜிஎஸ்டி தவிர்ப்பு: துபாயில் தங்கத்துக்கு ஜிஎஸ்டி (Goods and Services Tax) விதிக்கப்படுவதில்லை. இந்தியாவில், தங்கத்துக்கு 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, இது விலை அதிகரிக்கச் செய்கிறது. குறைந்த உற்பத்திச்செலவு: துபாயில் நகை கடைகள் தங்க நகைகளுக்கு குறைந்த உற்பத்திச்செலவை அதாவது குறைந்த மேக்கிங் சார்ஜ் மட்டுமே வசூலிக்கின்றன, இது தங்கத்தின் மொத்த விலையை குறைக்கிறது. Powered By ரூபாய் மதிப்பு: தினசரி உலகளாவிய தங்க விலை மற்றும் அமீரக திர்ஹம்-இந்திய ரூபாய் மதிப்பு விகிதம் தங்க விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அமீரகத்தில் தங்கம் வாங்குவதில் கிடைக்கும் பலன்: துபாயில் 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவை விட சுமார் 5% முதல் 7% வரை மலிவாக இருக்கும். இந்த விலை வித்தியாசத்தால் அங்கு தங்கம் வாங்கினால் பெருமளவுக்கு சேமிக்க முடியும்.
அதேநேரம், அப்படியே அள்ளிப்போட்டு நம்மூருக்கு வரவும் முடியாது. தங்கத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும்போது, இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் சுங்க வரிகள் உள்ளன. இது குறித்து தெரிந்து கொள்வது வெளிநாட்டில் தங்கம் வாங்குபவர்களுக்கு அவசியம். ஆண்களுக்கான தங்க வரம்பு: துபாயிலிருந்து இந்தியா வருகை தரும் ஆண்கள் சுங்க வரி இல்லாமல் 20 கிராம்
(அதிகபட்சம் ₹50,000 மதிப்பில்) தங்கத்தை கொண்டு வரலாம். தங்க நாணயம் அல்லது தங்க பிஸ்கெட்டாகவும் கூட இதை கொண்டுவர முடியும். ஆனால், 20 கிராம் அல்லது ₹50,000 மதிப்பை கடந்தால், அதற்கான கூடுதல் சுங்க வரியை செலுத்த வேண்டியதுதான். தங்கத்தின் கூடுதல் எடைக்கான சுங்க வரி: 20 கிராம் முதல் 50 கிராம் வரை: 3% சுங்கவரி 50 கிராம் முதல் 100 கிராம் வரை: 6% சுங்கவரி 100 கிராம் மேலாக: 10% சுங்கவரி இந்திய சுங்க அதிகாரிகளிடம், வாங்கிய தங்கத்தின் ரசீதுகளை (விலை, சுத்தம், தேதியுடன்) பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும். பெண்களுக்கான தங்க வரம்பு: பெண்கள் துபாயிலிருந்து சுங்க வரி இல்லாமல் 40 கிராம் (அதிகபட்சம் ₹1,00,000 மதிப்பில்)
தங்கத்தை கொண்டு வரலாம். இதை நகைகள், கோல்டு காயின், தங்க பிஸ்கெட் வடிவத்தில் கொண்டு வரலாம். இந்த வரம்பை மீறினால், சுங்க வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். Image: AI created கூடுதல் தங்கத்திற்கு சுங்க வரி: 40 கிராம் முதல் 100 கிராம் வரை: 3% சுங்கவரி 100 கிராம் முதல் 200 கிராம் வரை: 6% சுங்கவரி 200 கிராம் மேலாக: 10% சுங்கவரி பெண்கள் தங்கத்திற்கான சரியான ஆவணங்களுடன்,
வாங்கிய ரசீதுகளை இந்திய சுங்க அதிகாரிகளிடம் சரிபார்ப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கான தங்க வரம்பு: 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுங்க வரி இல்லாமல் 40 கிராம் தங்க நகைகளை (பரிசாக கிடைத்தவை உட்பட) கொண்டு வரலாம். அந்த குழந்தையின் உறவினர் பயணிப்பதற்கான அடையாள ஆவணம் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் கூடுதல் தங்கத்திற்கு சுங்க வரி: 40 கிராம் முதல் 100 கிராம் வரை: 3% சுங்கவரி 100 கிராம் முதல் 200 கிராம் வரை: 6% சுங்கவரி 200 கிராம் மேலாக: 10% சுங்கவரி மேலே நீங்கள் பார்த்த இந்த விதிமுறைகளை தாண்டி தங்கத்தை நீங்கள் கொண்டுவந்து பெரிய சேமிப்பை செய்துவிடமுடியாது. எப்படியும் வரி செலுத்திதான் ஆக வேண்டும். ரொம்ப குறைவாகவே சேமிக்க முடியும். இருப்பினும், அடிக்கடி ஊருக்கு வருவோருக்கு இது வரப்பிரசாதம்தான்