துபாய் செல்லும் இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் ஏமாற்றம்..
09 Dec,2024
விசா கொள்கையில் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ள மாற்றத்தால் தற்போது இந்தியர்களுக்கு விசா கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்தியர்களின் தெளிவாக தயார் செய்யப்பட்ட விசா விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படுவதால் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியர்கள் பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். இப்படி துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு இதற்கு முன்பாக எளிதில் விசா கிடைத்தது.
கிட்டத்தட்ட 100 இல் 99 சதவிகித விசாக்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு விசா எளிதாக கிடைத்துவிடும். ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ள மாற்றத்தால் இந்தியர்களுக்கு விசா கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
விசா கொள்கையில் மாற்றம்: தெளிவாக தயார் செய்யப்பட்ட விசா விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படுவதால் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் விசா கொள்கையில் கொண்டு வந்த மாற்றம்தான் காரணம். புதிய விதிகளின் படி சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க போகும் ஹோட்டல் புக்கிங் விவரங்கள் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் ஆகிய விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்டுள்ளது. 100 விண்ணப்பங்கள் நிராகரிப்பு:
உறவினர் வீடுகளில் தங்க திட்டமிடுபவர்கள், அதற்கான ஆவணத்தையும் பிறகு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் 1-2 சதவீத விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 5-6 சதவித விண்ணப்பங்கள் அதாவது தினமும் 100 விண்ணப்பங்களுக்கு மேல் நிராகரிக்கப்படுகிறது. அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து அனுப்பியும் கூட விசா நிராகரிக்கப்படுதாக பயண நிறுவனம் ஒன்றின் இயக்குநர் நிகில் குமார் கூறினார்.
பயண நிறுவனம் விளக்கம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், பயணிகள் உறவினர் வீட்டில் தங்குவதாக இருந்தால், அங்கு வசிப்பவர்களின் வாடகை ஒப்பந்தம், எமிரேட்ஸ் ஐடி, குடியிருப்பவர்களின் விசா நகல், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை சமர்பித்தாலும் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
பெண்கள்" ஹோட்டல் புக்கிங் மற்றும் விமான டிக்கெட்டிற்கு கட்டணம் செலுத்திய பிறகும் இதுபோன்று விசா நிராகரிக்கப்படுகிறது" என்றார். விசா கிடைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக பயணிகள், டிக்கெட் கட்டணம், ஹோட்டல் புக்கிங் ஆகியவற்றிற்காக செலவிட்ட தொகையினை இழக்க வேண்டி இருப்பதாகவும் பயண நிறுவனங்கள் கூறுகின்றன. யுஏஇ-ன் புதிய விசா விதி:
ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் புதிய விசா விதிகளை அறிமுகம் செய்தது. இந்த விதிகளின் படி, சுற்றுலாப் பயணிகள் தாங்கள் ஹோட்டல் புக்கிங் செய்ததற்கான ரிசர்வேஷன் ஆவணம், விமான டிக்கெட் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் ஆகியவற்றை வளைகுடா நாட்டின் இமிகிரேஷன் துறை தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டும் இன்றி துபாயில் தங்கியிருக்க தேவையான அளவுக்கு தங்கள் வங்கி கணக்கில் போதுமான பணம் இருப்பதையும் காட்ட வேண்டும். கடைசி மூன்று மாத வங்கி ஸ்டேட்மண்ட், குறைந்தது 50 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்து இருக்க வேண்டும். ஹோட்டல்களில் தங்குவதாக இருந்தால் பான் கார்டு விவரங்களை சமர்பிப்பிப்பது அவசியம்.