இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ரஷ்யா தயாராக உள்ளது: அதிபர் புடின் அறிவிப்பு
06 Dec,2024
மாஸ்கோவில் நடந்த விடிபி முதலீடு அமைப்பு கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில்,‘‘உற்பத்தியை ஊக்குவிப்பது, அன்னிய முதலீட்டை ஈர்ப்பது போன்ற உலக பொருளாதாரத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம், முதலீட்டை எளிதாக்குவதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் முதலீடுகள் லாபகரமாக இருப்பதால் இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுவ ரஷ்யாவின் விருப்பத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தியா நிலையான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. இந்திய பிரதமர் மோடியும் இந்திய அரசாங்கமும் நிலையான நிலைமைகளை உருவாக்கி வருகின்றனர். நாங்கள் எங்கள் உற்பத்தித் தளத்தை இந்தியாவில் தொடங்க தயாராக உள்ளோம். ரஷ்யாவின் இறக்குமதி மாற்றுத் திட்டம் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போன்றது. இந்தியாவின் தலைமை அதன் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையில் கவனம் செலுத்துகிறது’’ என்றார்.