தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!
25 Nov,2024
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடித்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கும் என்பதை உறுதி செய்ய சோதனை மூலம் சரிபார்த்து, அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் 75% பேருக்கு இன்புளூயன்சா என்ற வைரஸ் காரணமாக பரவி வருவதாகவும், இதில் ஏ வைரஸ் மற்றும் பி வைரஸ் என இரு பிரிவுகள் உள்ளதாகவும், இரண்டு வகைக்கும் தனித்தனி சிகிச்சை தேவைப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி வரும் நிலையில், காய்ச்சல் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு பரவாமல் இருக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்காததால் பாதிப்பு தீவிரமாகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.