பாகிஸ்தானில் பயங்கரம் இந்து பக்தர் சுட்டுக்கொலை
16 Nov,2024
பாகிஸ்தானில் சீக்கிய மத தலைவர் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி நான்கானா சாகிப்பில் உள்ள புனித தலத்துக்கு நேற்று ஏராளமான சீக்கியர்கள், இநு்துக்கள் சென்றனர். சிந்து மாகாணம் லார்கானாவை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் தனது நண்பர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் நான்கானா சாகிப்புக்கு சென்றுள்ளார்.
மன்னன்வாலா- நான்கானா சாகிப் ரோட்டில் வந்த போது 3 கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி காரை நிறுத்தியுள்ளனர். காரில் இருந்தவர்களிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்தனர். ராஜேஷ்குமார் பணம் தர மறுக்கவே கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.