இனி விசா இல்லாமல் 60 நாள் ஜாலியா சுத்தலாம்! தாய்லாந்து அரசு!
05 Nov,2024
தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூரில் இருக்கும் இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.
அழகான கடற்கரைகள் மற்றும் வளமான கலாச்சாரத்தைக் கொண்ட தாய்லாந்து இந்தியர்களின் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்டாக இருக்கிறது.
" முன்னதாக தாய்லாந்து செல்வதற்கான விசா பெறுவதற்கு கட்டணம் மற்றும் ஆவணங்கள் தேவைப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஆனால் ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு காரணமாக வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.
முதன்முதலாக இந்தியர்களுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை தாய்லாந்து அரசு நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதிலிருந்து இந்த நடைமுறையை ஒரு வருடத்திற்கு நீட்டித்திருந்தது. அப்போது இந்தியப் பயணிகளால் தாய்லாந்து அரசுக்கு திடீர் வருவாய் அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு நிரந்தரமாக விசா இல்லாத நுழைவை வழங்க தாய்லாந்து அரசு முன்வந்தது.
தாய்லாந்து மட்டுமின்றி மலேசியாவிலும் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெறும் 6 மாதங்களில் மலேசியா இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நான்காவது விடுமுறை சுற்றுலா தளமாக மாறியது. "பட்டாயா போறோம் பட்டைய கிளப்புறோம்.. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. தாய்லாந்து மெகா அறிவிப்பு..!!
" தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன. இதனால் மொத்தம் 70 மில்லியன் பார்வையாளர்கள் இந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பலர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆறு நாடுகளுக்கும் ஷெங்கன் வகை விசாவை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை அறிவித்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.