சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் வாடகை விமானம் மூலம் இந்தியர்கள் நாடு கடத்தல்:
27 Oct,2024
சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024ம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் சட்டவிரோதமாக நுழைந்த 29 லட்சம் பேரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் 90,415 பேர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அமெரிக்க அரசு அவர்களின் சொந்த நாட்டிற்கே நாடு கடத்தி வருகிறது. இதன்படி கடந்த 2024ம் நிதியாண்டில், இந்தியா உட்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.60 லட்சம் பேரை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அடங்குவர். கடந்த 22ம் தேதி கூட தனி வாடகை விமானம் மூலம் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.