ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்? - ஐ.சி.யு.வில் தீவிர சிகிச்சை!
09 Oct,2024
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், தற்போது அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.