“இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும்” - மதுரை ஆதீனம் தடாலடி
05 Oct,2024
“இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதே எனது ஆசை” என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வள்ளலார் சொன்னதை யாரும் கடைபிடிப்பது இல்லை. கள்ளுண்ணாமை குறித்து திருவள்ளுவர் சொன்னார். அதையும் யாரும் கேட்பதில்லை. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி சிறைபிடித்து வருகிறது. மீன் வலைகளை சேதப்படுத்துவதோடு, கோடி ரூபாய்க்கு அபராதம் விதிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். புதிதாக வந்துள்ள இலங்கை அதிபர் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளார். இதை பயன்படுத்தி தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டும் என்பதே எனது ஆசை” இவ்வாறு அவர் கூறினார்.