சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுவதால், மத்திய அரசு இதற்கு நிதி தர முடியாது என்று கூறி கைகழுவி உள்ளது. நாடாளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டோகன் சாஹு, இந்தத் திட்டத்திற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் விளைவாக, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில், மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை. இனியும் வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார். தயாநிதி மாறனின் கேள்விகளுக்குப் பதிலளித்த சாஹு, அதிக செலவில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9கிமீ வழித்தடத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டம்-2 க்கு 63,246 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது,சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான செலவினம் தற்போது மாநில அரசால் ஏற்கப்படுகிறத, என்றார். முதல் கட்ட திட்டத்திற்கு மட்டுமே நாங்கள் நிதி கொடுத்தோம். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார்.
கைவிரிப்பு: சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோவிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதிலும் கோவை, மதுரையில் முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு இதுவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.
ஏசியன் வங்கி உள்ளிட்டசர்வதேசவங்கிகளின் உதவியுடன் தமிழக அரசு மெட்ரோ அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் துளையிடுவதற்கு எல்&டி நிறுவனம் சிறுவாணி எனும் பிரமாண்ட துளையிடும் பணியினை முடித்து உள்ளது. 11 மாதப் பயணம் முடிந்து வெற்றிகரமாக பணியை முடித்தது 'சிறுவாணி' இயந்திரம்.
மெட்ரோ பணம்; உத்தர பிரதேசம் போன்ற முன்னேறாத மாநிலங்களில் 7 மெட்ரோ சேவைகள் உள்ள நிலையில் பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் தமிழ்நாட்டிற்கு, புதிய மெட்ரோ சேவைகளை தொடங்க இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டியும் கூட இதற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை.
ஏற்கனவே சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு அனுமதி தராத காரணத்தால் மதுரை, கோவை மெட்ரோ என்று இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த முடியும். உத்தர பிரதேசத்தில் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வருட இறுதிக்குள் மத்திய அரசின் நிதி உதவியுடன் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
நொய்டா
கிரேட்டர் நொய்டா
லக்னோ
கான்பூர்
ஆக்ரா
காசியாபாத் (DMRC)
மீரட் ஆகிய மெட்ரோ சேவைகள், மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட உள்ளன.
கோவை மெட்ரோ: இந்த நிலையில் கோவையில் மெட்ரோ பணிகள் இந்த வருடமே தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும்.
முதலில் கோவையில் மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆலோசனையின் முடிவில் இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொழில்நகரமான கோவை நகரின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்குப் பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டமே செயல்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ: இன்னொரு பக்கம் மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்கான மணல் ஆய்வு நடந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.
சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.
இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.
திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.
மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.
இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.