இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி? - வங்கதேச யூடியூபர் வெளியிட்ட அதிர்ச்சி
30 Jul,2024
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் எப்படி நுழைவது என்பது குறித்து யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர் கதையாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என்பதையும், பாஸ்போர்ட், விசா இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் எப்படி எளிதாக நுழைவது என்பதை வீடியோ மூலம் DUDI_PARMARAM என்ற யூடியூபர் விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைகிறார்கள் என்பதை அவர் விளக்கியுள்ளார். ராணுவம், காவல்துறை, உள்ளூர்வாசிகள் குறித்த எந்த பயமும், பதற்றமும் இல்லாமல் எளிதாக இந்தியாவுக்குள் அவர் நுழையும் இந்த வீடியோ தற்போது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்கள் வழியாக சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் எளிதாக இந்தியாவுக்குள் நுழைகின்றனர். லட்சக்கணக்கான ரோஹிங்கியா சமூகத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, இங்குள்ள சலுகைகளைப் பெறுவதற்கான அனைத்துப் பதிவுகளையும் செய்துள்ளனர் என்பது குறித்து யூடியூபர் DUDI_PARMARAM சுட்டிக் காட்டியுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் நேற்று பகிரப்பட்ட 21 நிமிட இந்த வீடியோ மூலம், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு எப்படி சட்டவிரோதமாக நுழைகிறார்கள் என்பதை அந்த யூடியூபர் காட்டியுள்ளார். அவருடன் மேலும் இருவர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த யூடியூபர் வங்காளதேச எல்லைக் கிராமமான ஜாம்கான் கரோவிலிருந்து இந்தியாவின் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு எளிதாக நுழைகிறார். வங்கதேசத்தின் கிராமத்தின் வழியாக நடந்து சென்று பிறகு இந்திய ராணுவம் அமைத்த வேலியை யூடியூபர் காட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், மேகாலயா உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களின் டிஜிபி." இது ஒரு வழி தான், இது போன்ற பல வழிகளில் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவது தினமும் நடப்பதாகக் கூறப்படுகிறது" என்று கூறியுள்ளார்