"3 முறை செத்து பிழைத்துவிட்டேன்" லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீது குமுறல்!
25 Jun,2024
தான் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார்.
தனித்துவமான குரல் உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எஸ். அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
90களில் பிறந்தவர்களின் மனங்கவர்ந்த பி.எஸ். அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதுவெறும் வதந்தி என அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார்.
முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “இலங்கையில் நலமுடன் இருக்கிறேன். இது வெறும் வதந்தி. பலர் என்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பி.எஸ். அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக மூன்று முறை செய்தி வெளியாகி பின்னர் அது வதந்தி என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.