இத்தாலி போன மோடி.. ஏர்போர்ட் சென்று வரவேற்காத இத்தாலி அரசு..
14 Jun,2024
பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்துகொள்வதற்காக இத்தாலியின் அபுலியாவுக்கு நேற்று சென்றடைந்தார். ஆனால் மோடியை வரவேற்க இத்தாலி அரசு சார்பாக யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். உலகில் இருக்கும் சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த வருட உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் உள்ள அபுலியாவில் நடக்கிறது.
இதற்காக மோடி இத்தாலி சென்றுள்ளார். மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அங்கே இன்று பல அரசியல் தலைவர்களை, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனுடன் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தி வருகிறார், அடுத்ததாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்கிறார். G7 அமர்வு செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி சென்றடைந்த பிரதமர், "உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாக" கூறினார்.
பொதுவாக மோடி வெளிநாடு சென்றால் அவரை வரவேற்க வெளிநாட்டு அரசியல் தலைவர் ஒருவராவது வருவர். அதாவது ஒன்று அந்நாட்டு பிரதமர் அல்லது அதிபர் வருவார். அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர். அல்லது வேறு அமைச்சர். அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் வருவார்கள்.
ஆனால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்துகொள்வதற்காக இத்தாலியின் அபுலியாவுக்கு சென்றடைந்தார். ஆனால் மோடியை வரவேற்க இத்தாலி அரசு சார்பாக யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி சார்பாக அந்நாட்டு பிரதமர் ஜார்ஜ் மெலோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் நட்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மெலோனி மற்றும் மோடி என்பதை சேர்த்து மெலோடி என்பதும் கூட சமீபத்தில் டிரெண்ட் ஆனது. அப்படி இருக்க மோடியை வரவேற்க அந்நாட்டு பிரதமர் அல்லது அதிபர் வரவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சரும் வரவில்லை. அந்நாட்டை சேர்ந்த வேறு அமைச்சர் யாரும் வரவில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக குறைந்த பட்சம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட மோடியை வரவேற்க வரவில்லை. இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டுமே மோடியை வரவேற்றனர். இத்தாலியில் இந்திய அரசு சார்பாக களமிறக்கப்பட்டு உள்ள தூதரக அதிகாரிகள் மட்டுமே மோடியை வரவேற்றனர்.
முதல்முறை மோடிக்கு இப்படி மெத்தனமான வரவேற்பு கொடுக்கப்பட்டது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செப்டம்பரில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது, இத்தாலிய ஜனாதிபதியின் கீழ் நடைபெறும் அபுலியா கூட்டத்தில் உலகத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இத்தாலியின் அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருக்கும் மோடியை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை வரவேற்பார் என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையில் அவர் வரவேற்க ஏர்போர்ட் வராதது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.