ரணிலுக்கு மோடி விடுத்துள்ள விசேட அழைப்பு
05 Jun,2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe), இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில், இந்திய பிரதமருக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து கூறியுள்ளார்.
இதன் உரையாடலின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி பாராட்டியுள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.