தமிழகத்தில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட எண் 165 வாகுச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மைக் சின்னம் இயங்கவில்லை என தெரிவித்து போராட்டம் நடத்தினர்
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால் மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
நீலகிரி பாராளுமன்ற தொகுதி: 3 மணி நிலவரப்படி 48.35 % வாக்குப்பதிவு
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 3 மணி நிலவரப்படி
உதகை : 48.54 %
கூடலூர்: 50.73 %
குன்னூர்: 48.35 %
மேட்டுப்பாளையம்: 52.65 %
அவினாசி : 55.86 %
பவானிசாகர் : 58.04 %
என மொத்தம் 53.02 % வாக்கு பதிவு
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை... நடிகர் சூரி புகார்
வாக்களிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் சூரி சென்ற நிலையில், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவியின் பெயர் இடம்பெற்றுருந்த நிலையில், அவர் பெயர் விடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டது வருத்தமளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார்.
கோவை பாராளுமன்றத் தொகுதியில் 47.03% வாக்குப்பதிவு
மதியம் 3 மணி நேர நிலவரப்படி கோவை பாராளுமன்றத் தொகுதியில் 47.03% வாக்கு பதிவாகியுள்ளது.
டிடிவி தினகரன் வாக்கினை செலுத்தினார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்குகளை செலுத்தினார்
விளம்பரம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் - சத்ய பிரதா சாகு
வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்படும் – தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
தேர்தலை முன்னிட்டு 4,03,800 பயணிகள் சொந்த ஊருகளுக்கு பயணம்
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கடந்த 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் சுமார் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளனர்
கடந்த 2021ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து மொத்தமாக இயக்கப்பட்ட 3,353 பேருந்துகளில் பயணித்த 1,36,963 பயணிகளை விட கூடுதலாக 1,18,037 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக இயக்கிய பேருந்துகள் மற்றும் பயணம் செய்த பயணிகளை விட தற்போது கூடுதலாக பயணித்துள்ளனர்
தமிழ்நாட்டில் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவாகியுள்ளது- தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
விளம்பரம்
தமிழ்நாட்டில் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவாகியுள்ளது- தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
நரிக்குறவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் நரிக்குறவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
மதுரை அருகே 7 மணி நேரமாக காலியாக காத்திருக்கும் வாக்குச்சாவடி மையம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கே.சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, பேய்குளம், உன்னிபட்டி ஆகிய பகுதிகளுக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் உர ஆலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்., வாக்களிக்க மாட்டோம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 ஊர் கிராம மக்கள்.
விளம்பரம்
அண்ணாமலையிடம் பெண் வாக்காளர் புகார்
கோவை அருகே வாக்கு சாவடிக்கு விசிட் அடித்த அண்ணாமலையிடம் வாக்காளர் அட்டையில் முகம் மாறி இருப்பதாக கூறி வாக்களிக்க விடவில்லை என பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கரூரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி வரும்பொழுது அண்ணாமலை திடீர் விசிட் செய்தார் வாக்குப்பதிவு நடப்பதை கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார் அப்போது பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையில் முகம் மாறி இருப்பதாக கூறி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தொ
சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு
டி நகர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி எண் 170 மொத்தம் 1022 வாக்குகளில் , இதுவரை 412 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோன்று,169வது வாக்குச்சாவடியில் 620 வாக்குகளில் 270 வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் 54.07% வாக்குகள் பதிவு
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 03.00 மணி வரை 54.07% வாக்குகள் பதிவாகியுள்ளது.
விளம்பரம்
#Vote4INDIA என்று குறிப்பிட்ட பாஜக நிர்வாக குஷ்பூ
ட்விட்டர் தளத்தில் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக தெரிவித்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ #Vote4INDIA என்ற Hashtag-ஐ பயன்படுத்தினார்.
ஜனநாயக கடமையாற்றிய திரபிரபலங்கள்
மக்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் - நடிகர் விஜய்
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்
வெறிச்சோடிய புதுச்சேரி வாக்குச்சாவடி...
புதுச்சேரியி 1 மணி நிலவரப்படி 44.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தினால் பிற்பகலில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஒரு ஒரே வாக்கு மட்டுமே பதிவு..
ஏற்காடு அருகே செங்கலதுபாடி வாக்குச்சாவடியில் மதியம் 1 மணி வரை ஒரு ஓட்டு மட்டுமே பதிவாகியுள்ளது. மயான பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை எனக்கூறி தேர்தலை மக்கள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
விளவங்கோட்டில் 35.14 % வாக்குப்பதிவு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 35.14% வாக்குப்பதிவாகியுள்ளது.
விளம்பரம்
குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 32.31 % வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% மற்றும் குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 32.31 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
1 மணி நிலவரப்படி 40.05% வாக்குப்பதிவு...
தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 40.05 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மணிப்பூர் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு
மணிப்பூரின் தமான் போக்பி பகுதியில் வாக்குப்பதிவின் போது கலவரம். ஹிரோய் ஷம்பா பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அச்சமான சூழல் நிலவுகிறது.
மேலும் எரோய்ஷம்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி சூறையாடப்பட்டதால் மணிப்பூரில் பதற்றமான சூழல் உள்ளது.
கையில் காயத்துடன் வாக்களித்த விஜய்
துபாயிலிருந்து மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த தவெக தலைவர் விஜய், நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். ரசிகர்கள் அதிகளவில் இருந்ததால், போலிசார் பாதுகாப்புடன் விஜய் வாக்களிப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவரது கையில் காயத்துடன் பிலாஸ்த்திரியோடு வாக்களித்தார். மீண்டும் போலிஸ் பாதுகாப்போடு அவர் அழைத்துசெல்லப்பட்டார்.
வாக்களிக்க புறப்பட்டார் நடிகர் விஜய்
துபாயிலிருந்து வந்த நடிகர் விஜய் வாக்களிக்க நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு புறப்பட்டார்.
இதுவரை 24.37% வாக்குப்பதிவு
காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளம்பரம்
புதுச்சேரியில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
புதுச்சேரியில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவின் 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை 28.10% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது கல்வீச்சு
மேற்குவங்கத்தில் கூச் பிஹார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட சந்தமரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கல்வீச்சு.
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
வாக்களிக்க வந்த மூதாட்டி மரணம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற 77 வயது மூதாட்டி சின்னப் பொண்ணு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.