விசா நடைமுறை விதி மீறல், இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது
12 Apr,2024
லண்டன்: இங்கிலாந்து விசா நடைமுறை விதிகளை மீறிய ஒரு பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து முழுவதும் குடியுரிமை அமலாக்க விதிகளை அரசு கடுமையாக்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் முறையான விசா இன்றி வந்த சிலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மேற்கு மிட்லேண்ட் பகுதியில் செயல்படும் படுக்கை, மெத்தை விரிப்பு தயாரிப்பு ஆலையில் குடியுரிமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், முறையான விசா இன்றி படுக்கை தயாரிப்பு ஆலையில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த 7 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பேக்கி ஒன்றில் வேலை செய்த 4 ஆண்களும், ஒரு வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் இந்தியர்கள் என இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.