கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானி வீட்டு திருமணத்தில் திருடுவதற்காக திருச்சியை சேர்ந்த 5 பேர் குஜராத்திற்கு சென்றுள்ள நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழா அண்மையில் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.
இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 ஆம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் உலக பணக்காரர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்கள் தகுதிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கியிருந்தனர். முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள உள்ள அனைத்து பொது மக்களையும் இந்த விழாவிற்கு அழைத்திருந்தார்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் நடைபெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணைகளில் திருடப்பட்டமை உண்மை என தெரியவந்தது.
பின்னர், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடிய கும்பலில் உள்ள ஒரு நபர் அடையாளம் காணப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அந்த நபரை டெல்லியில் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைகளில், திருச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர், அவருடன் சேர்ந்த தீபக், ஜெகன், குணசேகரன், முரளி, ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவிக்கையில், "பெரும் பணக்காரரான அம்பானி வீட்டின் திருமண நிகழ்வை அறிந்து திருடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அங்கு, எப்படியாவது திருடி வாழ்க்கையில் முன்னேறற வேண்டும் என்று குஜராத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலமாக இருந்ததால் கார் கண்ணாடியை உடைத்து திருடியுள்ளனர். இதை போல 7 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர்" என்றனர்.