இன்னும் 1 மாசம் தான் டைம்.. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. ஆதார்ல அதிரடி மாற்றம்!
13 Mar,2024
ஆதார் அட்டை தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தில்.. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உட்பட 9 ஐடி ப்ரூஃப் மற்றும் அட்ரெஸ் ப்ரூஃப் ஆவணங்கள் பட்டியலிடப்பட்டு, என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும், எந்த தேதிக்குள் செய்ய வேண்டும்? என்கிற புதிய காலக்கெடுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டிய விவரங்களை, மக்கள்தொகை விவரங்களுக்காக குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய செயல்முறையை, இலவசமாக செய்வதற்கான புதிய காலக்கெடுவானது 14 ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு மார்ச் 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India) ஆதார் அட்டைக்கான இலவச ஆன்லைன் ஆவண பதிவேற்ற வசதியை (Free Online Document Upload Facility) 2024 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த இலவச சேவையானது ஜூன் 14 வரை மைஆதார் போர்ட்டலில் (myadhaar portal) மட்டுமே கிடைக்கும் என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில், எந்த விவரங்களும் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அந்த அட்டைதாரர்கள் தங்களுடைய அடையாள சான்று மற்றும் முகவரி சான்று ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
முன்னரே குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 14, 2024 வரை மட்டுமே 'ஐடி ப்ரூஃப்' மற்றும் 'அட்ரெஸ் ப்ரூஃப்' ஆவணங்களை இலவசமாக அப்லோட் செய்ய முடியும்; அதன் பிறகு செய்தால்.. அதாவது ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை எந்தெந்த ஆவணங்களை ஐடி ப்ரூஃப் ஆக மற்றும் அட்ரெஸ் ப்ரூஃப் ஆக கொடுக்கலாம் என்பதில் சந்தேகம் இருந்தால்.. யுஐடிஏஐ வெளியிட்டுள்ள 9 ஆவணங்களின் பட்டியல் இதோ: 01. கடவுச்சீட்டு / பாஸ்போர்ட் (Passport) 02. பான் கார்டு (PAN card) 03. ரேஷன் கார்டு அல்லது பிடிஎஸ் போட்டோ கார்டு (Ration Card or PDS Photo card) 04. வாக்காளர் அடையாள அட்டை ' வோட்டர் ஐடி கார்டு (Voter Identification card) 05. ஓட்டுனர் உரிமம் / டிரைவிங் லைசன்ஸ் (Driving license)
06. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் 07. எம்ஜி-என்ஆர்இஜிஎஸ்-ன் ஜாப் கார்டு (Job card of MG-NREGS) 08. பிறந்த தேதி விவரங்களைக் கொண்ட சிஜிஎஸ்எச்ஏ/ எஸ்ஜிஎச்எஸ் போட்டோ ஐடென்டிட்டி கார்ட் (CGSHA/SGHS photo identity card) 09. வருமான வரியின் அசெஸ்மென்ட் ஆர்டர் (Assessment order of the Income Tax) ஜூன் 14-க்கு முன் ஐடி ப்ரூஃப் மற்றும் அட்ரெஸ் ப்ரூஅஃப்-ஐ இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? முதலில் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்தில் லாக்-இன் செய்யவும். பின்னர் ப்ரோஸீட் டூ அப்டேட் அட்ரெஸ் (Proceed to update address) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ (OTP) உள்ளிடவும்.
பின்னர் டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்; குடியிருப்பாளரின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும். அந்த விவரங்களை சரிபார்த்து, அடுத்த உள்ள ஹைப்பர்லிங்கை (Hyperlink) கிளிக் செய்யவும். இப்போது டிராப்டவுன் லிஸ்டில் இருந்து அடையாள சான்று (Proof of Identity) மற்றும் முகவரி ஆவணங்களை (Proof of Address) தேர்வு செய்யவும். பின்னர் உங்களுடைய அடையாளம் / முகவரி தொடர்பான ஆதாரத்தை பதிவேற்றவும். இப்போது 'சப்மிட்' பட்டனை கிளிக் செய்து குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். கடைசியாக உங்களுடைய 14 இலக்க அப்டேட் ரெட்வெஸ்ட் நம்பர் (Update Request Number - URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களுடைய ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்படும்!