நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது: மாலத்தீவு அதிபர் முய்சு திட்டவட்டம்
07 Mar,2024
: சீனா – மாலத்தீவு இடையான உறவை வலுப்படுத்தும் வகையில், மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் நீர்நிலைகள் ஆய்வு தொடர்பாக இந்தியாவுடன் இருக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் முகமது முய்சு கூறுகையில், ‘‘பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் மாலத்தீவு கடற்பரப்பில் இந்த மாதம் 24வு7 கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கு நாடு செயல்பட்டு வருகின்றது.
மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் நீருக்கடியில் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளை நாட்டிலேயே பெற முயற்சிக்கிறது. இதன் மூலம் நமது நாட்டில் நீருக்கடியில் ஆய்வுகளை நாமே மேற்கொள்ள முடியும். எனவே நீருக்கடியில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்வதற்காக இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.