எச்1பி விசா, கிரீன் கார்டு நடைமுறையை மேம்படுத்த பைடன் நடவடிக்கை, வௌ்ளை மாளிகை
01 Mar,2024
வாஷிங்டன்: எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மேம்படுத்த பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியதாவது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கவும், குடியேற்ற அமைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் எடுத்த முயற்சிகளின் ஒருபகுதியாக
உள்நாட்டு பாதுகாப்புத்துறை எச்1பி விசா தொடர்பான புதிய விதியை வௌியிட்டுள்ளது. எச்1பி விசா, கிரீன் கார்டு மற்றும் நாட்டின் சட்டப்பூர்வ குடியேற்றங்கள் தொடர்பான சிக்கல்களை களைய பைடன் நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
* பைடன் நலமுடன் உள்ளார்
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆண்டுதோறும் செய்யப்படும் உடல்நல பரிசோதனையை செய்து கொண்டார். இதுகுறித்து பைடனின் மருத்துவர் கெசின் ஓ கானர், “81 வயதான பைடன் நாள்தோறும் செய்யும் கடமைகளை செய்ய தகுதியுடையவர். அவர் தன் அனைத்து செயல்களையும் முழுமையாக செய்கிறார்” என்று தெரிவித்தார்.