அயோத்தி ராமர் கோவிலை விட 5 மடங்கு பெரிய ராமர் கோயில்...!
26 Jan,2024
அயோத்தி ராமர் கோவிலை விட இந்தியாவில் 5 மடங்கு பெரிய ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
1080 அடி நீளமும் 540 அடி அகலமும் கொண்ட இந்த கோயில் பிரம்மாண்ட ராமர் கோயில் என்றழைக்கப்படும்.
5 கோபுரங்களாக உருவாகும் இந்த கோயிலில் மிக உயரமான கோபுரம் 405 அடியிலும், மீதமுள்ள 4 கோபுரமும் 180 அடியிலும் கட்டப்படவுள்ளது.
இந்த கோயில் நுழைவு வாயிலில் 20ஆயிரம் பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யக்கூடிய அளவில் ஒரு பெரிய பிரார்த்தனை கூடம் ஒன்று அமையவுள்ளது.
இந்த கோவிலை நிர்மாணிக்கும் பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பமாகியது.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் உள்ள கைத்வாலியாவில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
நிர்மாணப் பணிகள்
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலை விட இந்த கோவில் ஐந்து மடங்கு பெரியதாக கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் முழுமையாக கட்டப்பட்ட பிறகு ஜனக்பூர் வழியாக அயோத்தி செல்லும் மக்கள் இந்த கோயிலை தூரத்தில் இருந்தே காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம்ஆண்டு இறுதிக்குள் கோவிலின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது