செங்கடல் விவகாரம் இந்தியாவுக்கு ஆபத்து
19 Jan,2024
செங்கடல் விவகாரம் காரணமாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்து நிலவுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிக மோசமாக பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா தற்போது பாகிஸ்தானை எதிரியாக பார்க்காத நிலையில் சீனாவினை முதன்மை எதிரியாக கருதுகின்றது.
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து
இவ்வாறான பின்னணியில் ஈரான்,பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக செங்கடல் வழியாக மசகு எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான், பாகிஸ்தான் பதற்றம் காரணமாக எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுவதினை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் தெரிவித்துள்ளார்.