மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது
17 Jan,2024
இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (16) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டு மீன்பிடி இழுவைப் படகுகள் மூலம் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
உள்ளூர் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளங்களின் விளைவுகளை கருத்தில் கொண்டே இந்த ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், நேற்றைய தினம் (16) இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய கடற்தொழிலாளர்களுடன் 02 இந்திய இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் (12) மற்றும் மீன்பிடி படகுகள் (02) என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.