வேகம் குறையாத கொரோனா,புதிதாக 609 பேர் பாதிப்பு, 4 பேர் பலி
16 Jan,2024
இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,643 ஆக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 'ஜே.என்.1’ கொரோனா திரிபு அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, கேரளாவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,643 ஆக குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 5ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்களிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு புதிய திரிபு மற்றும் குளிர்காலம் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.
சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.4 கோடிக்கும் அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் குணமடையும் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.