கோயில் வடிவிலே உருவாக்கப்பட்டுள்ள இந்திய விமான நிலையம்! அசத்தும் தமிழர்கள்
05 Jan,2024
இந்தியாவில் 1100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள கோயில் வடிவிலான விமான நிலைய முனையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (03-01-2024) திறந்து வைத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய முனையம் ஏறக்குறைய 75000 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவில் உள்ள சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் 7வது பெரிய விமான நிலையமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விமான நிலையத்தில் 47 க்கும் மேற்பட்ட செக்-இன் சோதனை இடங்களும், டாக்ஸி சேவைகள், புறப்படும் பகுதியில் 10 வாயில்கள், வருகை தரும் பகுதியில் 6 வாயில்கள், மற்றும் ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள்மற்றும் 1,500 உள்நாட்டு பயணிகளுக்கான இட வசதிகளும் மற்றும் 40 குடியேற்றப் பிரிவு மையங்கள், என்பனவும் 48 பயணிகளை, 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் என்பனவும் உள்ளன.
மேலும், கோயில் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.