ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை
07 Dec,2023
ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 7 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரிடமும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.