நடுவழியில் ரெயிலை நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுனர்கள், அவதிக்குள்ளான 2,500 பயணிகள்!
30 Nov,2023
.
,
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று சஹர்சா-படெல்லி இடையே சிறப்பு ரயில் ஒன்றும், பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இயக்கப்பட்ட விரைவு ரயில்களில், 2500 பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், சஹர்சா ரயிலின் ஓட்டுநர் மதியம் 1.15 மணியளவில் புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி பாதியில் இறங்கிச் சென்றுள்ளார். அதே போல, பரோனி ரயில் ஓட்டுநரும் மாலை 4 மணியளவில் புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது இறங்கிச் சென்றுள்ளார். இந்த ரயிலானது ஏற்கனவே 5.30 மணி நேரம் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
சஹர்சா ரயிலின் பயண நேரம் 25 மணி நேரம் என்பதால் 3 -வது நாளாக பயணிகள் ரயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேலும், அதிக கட்டணம் செலுத்தி பயணித்ததாகவும் ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன்படி, பயணிகள் அளித்த புகாரின்படி ரயில் தாமதமாக சென்றது. இரு ரயிலின் ஓட்டுநர்களும், தூக்க கலக்கத்தில் இருந்ததால் பாதியில் இறங்கிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.