2 நாடுகள் விசா இன்றி மலேசியாவிற்குள் நுழைய அனுமதி
27 Nov,2023
.
மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறையை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாட்கள் வரை தங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
.
பாதுகாப்புச் சோதனை நடத்தப்படும்
இதேவேளை இந்த நடைமுறையானது அடுத்த மாதம் 1ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
விசா தேவையில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றமை பற்றி அறிய பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.