தாராவி பகுதிக்குள் நுழையும் அதானி குழுமம் .தாராவியில் வாழும் மக்களின் நிலை கேள்விக்குறி!
07 Nov,2023
மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியின் அடையாளத்தை மாற்றும் பொறுப்பை அதானி குழுமம் எடுத்துள்ளதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்று மும்பையில் உள்ள தாராவி. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் உள்ள தொழிலாளர்கள் பலரும் தாராவியைச் சேர்ந்தவர்கள்.
இங்குள்ள மக்களின் குடிசைப்பகுதிகளை அழித்து மும்பை நகருக்கு ஈடான தரத்தில் மாற்ற போவதாக பல கட்சிகளின் ஆட்சியாளர்கள் கூறினர்.
ஆனால், அவர்களது நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு, பலதலைமுறைகளாக அதிகாரம் செலுத்தும் தமிழர்களின் உறுதி சான்றாக இருந்தது.
இந்நிலையில், குடிசை மாற்றுத் திட்டப்பணி மூலமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மறுகுடியமர்வு மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில், 1.25 லட்சம் வீடுகளில் செறிந்துள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
அதாவது, தாராவியின் அடையாளத்தை மாற்றும் பணியை அதானி குழுமம் மேற்கொள்ள இருக்கிறது. இங்கு, வசிக்கின்ற மக்களுக்காக 47 ஏக்கரில் ரயில்வே இடம் ஒதுக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள், நவீன குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் என நவீன் வசதிகள் கொண்ட இடமாக மாற்றப்படுகிறது.
இந்த பணிகளில் 80% அதானி குழுமம் மற்றும் 20% பணிகளை மாநில அரசும் எடுத்து செய்கிறது. ரூ12,500 கோடி முதலீட்டுடன் காலடி வைக்கும் அதானி குழுமத்தால், சுமார் 7 ஆண்டுகளில் தாராவியின் அடையாளமே மாறியிருக்கும் என கூறுகின்றனர். இதனால், பலதலைமுறைகளாக தாராவியில் வாழும் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.