இன்று முதல் இந்த 5 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை!
01 Nov,2023
இந்தியர்களுக்கு சில நாட்டு அரசுகள் விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய இடங்களுக்கு செல்வது பலருக்கும் பிடித்த ஒன்று, இந்தியர்கள் விசா பெறாமல் செல்ல கூடிய நாடுகள் பற்றி பார்ப்போம்.
நம் நாட்டை தவிர பிற நாடுகளுக்கு செல்லும் போது விசா காட்டாயம் ஆகும். ஆனாலும் சில நாடுகள் அந்த சட்டத்தில் தளர்வுளை ஏற்படுத்தி உள்ளன.
இனி இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் நேபாளத்திற்கு செல்ல முடியும். இதனால் வடமாநில மக்கள் அதிகம் பயன்பெறுவர்.
ஜமைக்கா நாட்டிற்கு விசா பெறாமல் ஒரு மாதம் வரை பயணம் செய்யலாம். உங்கள் பாஸ்போர்ட் விசாவாக கருதப்படும். விசா இல்லாமல் ஃபிஜிக்கு செல்ல 12 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் அங்கு சென்று வரலாம்.
அடுத்த ஆண்டு மே 2024 வரை தாய்லாந்திற்குச் செல்ல இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா தேவையில்லை. விடுமுறை அல்லது வணிகத்திற்காக சென்றால் மட்டும்.
மேலும் இந்தியர்கள் பூடானுக்கு செல்ல விசா தேவையில்லை. ஆனாலும், உள்ளே செல்லும் போது அனுமதி பெற வேண்டும்.