இந்தியாவிலிருந்து சால்வடார் நாட்டிற்கு சென்றால் ரூ. 90 ஆயிரம் வரி கட்ட வேண்டும்ஸ ஏன் தெரியுமா?
31 Oct,2023
ஆப்பிரிக்கா அல்லது இந்தியாவிலிருந்து வரும் பயணிகளிடம் எல் சால்வடார் நாடு 1,130 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ. 90 ஆயிரம் ஆகும். எதற்காக இந்த வரி விதிக்கப்படுகிறது என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா அல்லது 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து பாஸ்போர்ட்டில் பயணம் செய்பவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று எல் சால்வடார் நாடு அக்டோபர் 20 ஆம் தேதி அறிவித்திருந்தது. இவ்வாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் வரி வசூல் நாட்டின் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று எல் சால்வடார் அரசு கூறியுள்ளது.
இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் மத்திய அமெரிக்கா வழியாக அமெரிக்காவிற்கு வருகிறார்கள். இந்த வழி மூலமாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவது என்பது எளிதாக உள்ளது. எனவே இதனை தடுப்பதற்காக எல் சால்வடார் நாடு பல்வேறு அதிரடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து வரிகள் உள்பட 1,130 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலுள்ள 57 நாடுகளின் பட்டியலிலிருந்து வரும் பயணிகளைப் பற்றி தினமும் சால்வடோர் அதிகாரிகளுக்கு விமான நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.
எல் சால்வடார் நாட்டிற்கு விமானத்தை இயக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக கொலம்பிய ஏர்லைன் ஏவியான்கா செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளி நாடுகளின் பட்டியலிலிருந்து வரும் பயணிகள் எல் சால்வடாருக்கு விமானங்களில் ஏறும் முன் கட்டாயக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவித்துள்ளது.