பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை.
21 Oct,2023
.
பாகிஸ்தானுக்கு உதவிய 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருவதற்கு தேவையான பொருட்களை பாகிஸ்தானுக்கு சீனாவில் உள்ள நிறுவனங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
.
இதனையடுத்து ஜெனரல் டெக்னாலஜி லிமிடெட், லுவோ லுவோ தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் மற்றும் சாங்சோ உடெக் கம்போசிட் ஆகிய 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா | Us Sanctions Chinese Companies Helped Pakistan
மேலும், பேரழிவு தரும் ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் விநியோகம் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு அதன் நட்பு நாடான சீனா பல்வேறு உதவிகளை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.