ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கோரி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார்.ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கோரி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார்.
ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கோரி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார்.
வரலாற்றில் நாடுகளை ஆக்கிரமிக்கவே போர்கள் தொடுக்கப்பட்டன. ஆனால், நாடு உருவானதால் போர் மூண்டது இஸ்ரேலில்தான். இதனை அன்றே கணித்த இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி மற்றும் முதல் பிரதமர் நேரு, இஸ்ரேல் உருவாவதை முதலில் எதிர்த்தனர்.
அரபு நாடுகளின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில், 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. நாட்டை உருவாக்கியதை விட, அதனை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, யூதர்கள் அதாவது இஸ்ரேல் முனைப்பு காட்டியது.
ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கோரி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார். ஐரோப்பாவில் யூதர்களின் படுகொலையை நேரில் கண்ட சாட்சியாகவும், தனி நாட்டின் அவசியம் கோரியும் பிரதமர் நேருவுக்கு 4 பக்க விளக்க கடிதத்தை ஐன்ஸ்டீன் அனுப்பினார். ஆனால், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகே, ஐன்ஸ்டீனுக்கு நேரு பதில் கடிதம் எழுதினார். அதில், யூதர்கள் குறித்து ஆழமான உணர்வுகள் மனதில் இருந்தாலும், அரேபியர்கள் குறித்து அனுதாபம் கொள்வதாக குறிப்பிட்டார். இதன் மூலம், ஐன்ஸ்டீனின் கோரிக்கையை அப்போதைய பிரதமர் நேரு நிராகரித்தார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாவதை விரும்பாத இந்தியா, அதற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களித்தது. இருப்பினும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என 2 நாடுகளை உருவாக்கும் முன்மொழிவு, 1948ஆம் ஆண்டு ஐ.நா சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. முதலில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, 2 ஆண்டுகளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. 1950 ஆம் ஆண்டு இஸ்ரேலை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக இந்தியா ஏற்றது. அரபு நாட்டு நண்பர்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக, இஸ்ரேலை முதலில் நிராகரித்ததாக நேரு விளக்கம் அளித்தார். இதன் வெளிப்பாடாக டெல்லிக்கு பதிலாக முதலில் மும்பையில் இஸ்ரேலின் தூதரகம் அமைக்கப்பட்டது. அரபு நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல், இஸ்ரேலையும் நிராகரிக்காமல், கத்தி மேல் நடப்பதை போன்று இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது.
இதன் பலனாக , 1962 ஆம் ஆண்டு சீனப் போரின் போது, இந்தியாவிற்கு உதவ இஸ்ரேல் முன்வந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரின் போது இஸ்ரேல் தனது முழு ஆதரவை இந்தியாவுக்கு வழங்கியது. கடந்த 1992 ஆம் ஆண்டு டெல்லியில் இஸ்ரேல் தூதகரமும், டெல் அவிவில் இந்திய தூதரகமும் திறக்கப்பட்ட போது, இரு நாடுகள் இடையிலான வெளியுறவு உறவு மேலும் வலுப்பெற்றது.
இது, 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போர் இந்தியாவிற்கு மிகுந்த பக்கப்பலமாக அமைந்தது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இஸ்ரேலுடன் இந்தியா தற்போது வரை நல்லுறவையே பேணி வருகிறது. கடந்தாண்டு வரை இஸ்ரேலின் ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்யும் நாடும் இந்தியாதான். ரஷ்யா உக்ரைன் போரில் கூட நடுநிலை வகிப்பதாக கூறிய இந்தியா, ஹமாஸ் படையுடனான போரில் இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.